சேலம்: நிலப்பிரச்னை தொடர்பாக கமிஷனர் அலுவலகம் முன் சகோதரர்கள் தீக்குளிக்க முயன்றனர்.
சேலம், பள்ளப்பட்டி,
ஆலமரத்துக்காட்டை சேர்ந்தவர் நாகராஜன். இவருக்கு, 40 சென்ட் நிலம் உள்ளது. இவரது பக்கத்து நிலத்தை சேர்ந்தவர் தேவராஜ். இவர்கள் இடையே நிலப்பிரச்னை உள்ளது. இருதரப்பினரும் பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளனர்.
நேற்று தேவராஜ் அந்த இடத்தில் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுத்தார். இதில் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் நாகராஜன் மகன்களான பிரகாஷ், 27, சாரதி, 30, ஆகியோர், நேற்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தனர்.
தொடர்ந்து பெட்ரோலை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அங்கிருந்த போலீசார், தண்ணீரை ஊற்றி சமாதானப்படுத்தினர். அப்போது பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் ராணி, ஒருதலைபட்சமாக செயல்படுவதாக புகார் தெரிவித்தனர். இதுகுறித்து அன்னதானப்பட்டி ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று, போலீசார் விசாரித்தனர்.
Advertisement