சேலம்: சேலம், பள்ளப்பட்டி, 2வது கிழக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சிவக்குமார், 31. லீபஜார் லாரி புக்கிங் ஆபீசில், லோடுமேனாக உள்ளார். கடந்த, 13ல் மகேஸ்வரி, 30, என்பவர் லீபஜாரில் மளிகைப்பொருட்களை வாங்கி கொண்டு அங்குள்ள மார்க்கெட் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றார். பெங்களூரு - காரைக்கால் ரயிலில் புக்கிரவாரிக்கு புறப்பட்டார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற சிவக்குமார், ஓடும் ரயிலில் மகேஸ்வரி அணிந்திருந்த, 3 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு தப்பினார். மகேஸ்வரி புகார்படி சேலம் ரயில்வே போலீசார் விசாரித்து சிவக்குமாரை நேற்று கைது செய்தனர்.
அவர் வாக்கு
மூலத்தில், 'சொந்த ஊர், மேட்டூர் அருகே குஞ்சாண்டியூர், கோனுார் கிராமம். பறித்த தாலிக்கொடியை, லீபஜார் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில், 96 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்தேன். அந்த பணத்தில் ஏற்கனவே அங்கு அடகு வைத்த நகைக்கு, 28 ஆயிரம் ரூபாய் செலுத்தி அந்த நகையை மீட்டேன். மீதி பணத்தை மாமியாரிடம் கொடுத்து வைத்துள்ளேன்' என்றார். இதனால் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
Advertisement