ஈரோடு: ஈரோடு மாநகர பகுதியில் சொத்து வரி செலுத்தாததால், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள வீடு, வணிக கட்டடங்கள், காலி இடங்களுக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த மாநகராட்சி மூலம் நோட்டீஸ் அனுப்பி, வரியை செலுத்த வலியுறுத்தி வருகின்றனர்.
நீண்ட நாட்களாக சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்குகின்றனர். அதன் பின்னும் செலுத்தாததால், குடிநீர் இணைப்பை துண்டித்து வருகின்றனர்.
இதன்படி மாநகராட்சி மண்டலம்-1, 23வது வார்டு கிருஷ்ணன் வீதியில் சொத்து வரி, 37,972 ரூபாய் பாக்கி வைத்திருந்த வெற்றிசெல்வி என்பவரது வீட்டின் குடிநீர் இணைப்பை துண்டித்தனர். வரி பாக்கி தொகையை வரும், 31க்குள் செலுத்த வேண்டும். அப்போதும் செலுத்தாவிட்டால் நீதிமன்றம் மூலம் சட்ட
நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, அறிவுறுத்தி உள்ளனர்.
இதேபோல, பலருக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.