ஈரோடு: தெற்கு மாவட்ட காங்., கமிட்டி சார்பில், பொதுத்துறை நிறுவனங்களை காக்க வலியுறுத்தி,ஈரோடு மூலப்பாளையத்தில் மாவட்ட தலைவர் மக்கள்ராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
எல்.ஐ.சி., - ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா போன்றவற்றின் பங்குகள் மற்றும் நிதியை அதானி நிறுவனத்துக்கு பாதுகாப்பற்ற முறையில் வழங்குவதை நிறுத்த வேண்டும். அவற்றை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். என்.எல்.சி., - ரயில்வே
உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் அழியாமல் காப்பாற்ற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதையும், அவற்றுக்கு இணையான தனியார் நிறுவனங்களை ஊக்குவிப்பதையும் மத்திய அரசு கைவிட வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி, பஞ்., தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் பாலு, கதிர்வேல், ஈஸ்வரமூர்த்தி, முத்துகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.