ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கும் விடுதி, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தனியார் நிறுவனம் நடத்தும் மகளிர் விடுதி, அனைத்து பெண்கள் தங்கி பயிலும் மகளிர் கல்லுாரி விடுதிகளை, அரசிடம் உரிமம் பெற்று விடுதிகளை இயக்க வேண்டும்.
மகளிர் விடுதிகள் பதிவு செய்யாமல் இருப்பவர்கள், பதிவினை புதுப்பிக்காமல் இருப்போர் உடனடியாக கருத்துருவை அனுப்ப வேண்டும்.
ஈரோடு கலெக்டர் அலுவலக, 6 வது தளத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல
அலுவலகத்தை வரும் ஏப்., 15க்குள் அணுகி, கருத்துரு வழங்க வேண்டும். முறையான விசாரணைக்குப்பின் உரிமம் வழங்கப்படும். தவறும் பட்சத்தில் விடுதிகளின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இத்தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
Advertisement