ஈரோடு: ஈரோட்டில் கிரானைட் கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு போன சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க, மூன்று தனிப்படை அமைத்துள்ளனர்.
ஈரோடு, பழையபாளையம், கீதா நகர், 2வது வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார். கிரானைட் கடை வைத்துள்ளார். இவர் கடந்த, 12 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மனைவி மஞ்சுளாதேவி, 55, தனது தாயாருடன் வசித்து வருகிறார். இவர்களது மகன், அமெரிக்காவில் பணி செய்கிறார்.
மேற்கு வங்கத்தில் உள்ள காளி கோவிலுக்கு கடந்த, 8ல் மஞ்சுளாதேவி சென்றார்.
தன்னுடன் இருந்த தாயாரை, பூந்துறையில் உள்ள தோட்டத்து வீட்டில் விட்டிருந்தார்.
மஞ்சுளாதேவி கடந்த, 14ல் வீடு திரும்பியபோது, வீட்டின் பின்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டின் லாக்கரில் இருந்த, 12.50 லட்சம் மதிப்பில், 18 பவுன் நகை, 4.50 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப் பகுதியில் பதிவாகி இருந்த,
'சிசிடிவி' கேமரா பதிவுகளை சேகரித்தனர். அதில் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஈரோடு தாலுகா இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில், மூன்று தடைப்படையினர், மர்ம நபர்களை பிடிக்க வெளி மாவட்டங்களுக்கு சென்றுள்ளனர்.