ஈரோடு: ஈரோடு வி.இ.டி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 'யுகா 2023' கல்லுாரிகளுக்கு இடையிலான கலைத்திறன் போட்டிகள் நடந்தன.
இந்த கலாசார நிகழ்வின் நோக்கம், மாணவர்களிடையே புதிய கலை நுட்பங்களை வெளிக்கொணர்வதாகும். இந்த விழாவிற்கு வேளாளர் கல்விக் குழுமங்களின் தாளாளர் மற்றும் வேளாளர் அறக்கட்டளை செயலாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். வி.இ.டி., - ஐ.ஏ.எஸ்., முதன்மைக் கல்வி ஆலோசகர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்து பேசினார். கல்லுாரி முதல்வர் முனைவர் சரவணன் வரவேற்றார். கல்லூரி நிர்வாக அலுவலர் லோகேஷ் குமார், கல்வி புலமுதல்வர் நல்லசாமி மற்றும் அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.