ஒகேனக்கல்: ஒகேனக்கல்லில் தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் முதற்கட்டமாக, 17.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில், ஒகேனக்கல் சுற்றுலாத்
தலத்தை மேம்படுத்தும் பணிகளை கடந்த, 5ல், மாநில வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
இதற்காக, 3.10 ஏக்கர் நிலம், மாவட்ட நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நுழைவாயில், பார்வையாளர் மாடம், பரிசல் நிறுத்துமிடம், எண்ணெய் குளியலுக்கான இடங்கள், உடைமாற்றும் அறை மற்றும் பாதுகாப்புடன் குளிக்க வசதி ஏற்படுத்துதல், டிக்கெட் கவுண்டர், பரிசல் நிறுத்துமிடம், பரிசல் சென்றடையும் பகுதி, மசாஜ் பகுதி, ஆழ்துளை கிணறு, உணவகம், சொகுசு நடைபாதை, எண்ணெய் கழிவு சுத்திகரிப்பு நிலையம், காட்சி கோபுரம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இப்பணிகளை, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி நேற்று ஆய்வு செய்து, பணிகள் குறித்து மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் கதிரேசனிடம் கேட்டறிந்தார்.
மேலும், சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாதவாறு பணிகளை மேற்கொள்ள வேண்டும். எந்நேரமும் தடையின்றி அருவிகளை கண்டு களிக்க பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.