தர்மபுரி: பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில், 13வது அறிவியல் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி மற்றும் விரிவாக்க கல்வி இயக்குனர் முருகன் தலைமை வகித்தனர். இதில், சந்தையுடன் இணைந்த கூட்டு பண்ணையம், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பயிர் ரகங்கள் குறித்து, விவசாயிகளுக்கு அவர்கள் எடுத்துரைத்தனர்.
பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா மற்றும் உதவி பேராசிரியர் தெய்வமனி ஆகியோர், கடந்தாண்டு நடந்த ஆலோசனை கூட்டத்தின் பரிந்துரை படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.
மேலும், அடுத்து வரும் காலங்களில் விவசாயம், கால்நடை, மீன் வளர்ச்சி ஆகியவற்றில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பேசினர். நிலைய உதவி பேராசிரியர்கள் ராஜபாஸ்கர், சிவக்குமார், தங்கதுரை உள்பட பலர்
பங்கேற்றனர்.
Advertisement