பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில், கண் அழுத்த நோய் பரிசோதனை சிறப்பு முகாம், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை பேராசிரியர் இளங்கோவன் தலைமையில் நடந்தது. மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் டாக்டர்கள் லலிதா, கலாவதி, ஷாலினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனை டாக்டர் அருண்
வரவேற்றார்.
முகாமை, தர்மபுரி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் சாந்தி தொடங்கி வைத்து பேசுகையில், ''பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் பொதுமக்களின் நலன் கருதி கண்புரை அறுவை சிகிச்சை மையம் வரும் மார்ச், 23 முதல் தொடங்கபட உள்ளது. இதில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி பேராசிரியர் இளங்கோவன் உள்ளிட்ட டாக்டர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொள்வர். கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்கள், அறுவை சிகிச்சைகள்
இங்கேயே மேற்கொள்ளப்படும். இப்பகுதி மக்கள் தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இனி செல்ல தேவையில்லை. சுற்று வட்டார பகுதி மக்கள் இதை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம்,'' என்றார்.