ஓசூர்: ஓசூரில் இருந்து ஒன்னுகுறிக்கை வழியாக பொம்மதாத்தனுார் செல்லும், 6ம் நம்பர் அரசு டவுன் பஸ்; தேன்கனிக்கோட்டையில் இருந்து, குல்லட்டி, ரத்தினகிரி, பேவநத்தம் வழியாக செல்லும், 25ம் டவுன் பஸ்; தேன்கனிக்கோட்டையில் இருந்து ஜவளகிரி வழியாக சென்னமாளம் வரை செல்லும், 28ம் நம்பர் டவுன் பஸ், ஆகிய டவுன் பஸ்களின் சேவையை, தேன்கனிக்கோட்டையில் இருந்து, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் ஆகியோர், கொடியசைத்து துவக்கி வைத்தனர். மேலும், எம்.எல்.ஏ., பிரகாஷ், சிறிது துாரம் பஸ்சை இயக்கினார்.
தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்., தலைவர் சீனிவாசன், தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, கெலமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்த மூன்று வழித்தடங்களில் அரசு டவுன் பஸ்களை இயக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக மக்கள் கேட்டு வந்த நிலையில், பஸ் சேவை துவங்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.