கிருஷ்ணராயபுரம்: கரூர்-திருச்சி பழைய நெடுஞ்சாலை லாலாப்பேட்டை ரயில்வே மேம்பாலம் சாலை அருகில் குப்பை எரிக்கப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
குப்பை திறந்த வெளியில் கொட்டப்பட்டுள்ளது. இதில் அதிகமான கோழி கழிவுகள், தோல் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், கூடிய குப்பை கொட்டி திறந்த வெளியில் பகல் நேரத்தில் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் பரவும் புகையால் சுற்று சூழல் மாசு ஏற்பட்டு வருகிறது. மேலும் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் புகை காரணமாக பெறும் சிரமத்துடன் அப்பகுதியை கடக்க வேண்டியுள்ளது. ஆகையால் சாலையோரம் குப்பை எரிக்காமல் திடக்
கழிவு மேலாண்மை முறையில் குப்பை தரம்
பிரித்து எரிக்க தேவையான நடவடிக்கை பஞ்சாயத்து
நிர்வாகம் எடுக்க வேண்டும்.