வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இடமில்லை என ராகுலை பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கடுமையாக சாடி பேசியுள்ளார்.

பா.ஜ., யுவ மோர்ச்சா நிகழ்ச்சியில் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா பேசியதாவது: இந்த நிகழ்ச்சியில் தேசத்தின் இளைஞர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவில் அரசியல் கலாசாரத்தில் பிரதமர் மோடி மாற்றம் கொண்டு வந்துள்ளார். அவர் கொண்டு வந்துள்ள மாற்றத்தை நாட்டின் எல்லா பகுதியில் உள்ள மக்களுக்கு இளைஞர்கள் எடுத்துரைக்க வேண்டும். தேச விஷயங்களில் இளைஞர்களின் ஈடுபாடு அதிகளவு இருக்க வேண்டும். ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இடமில்லை. காங்., மனதளவில் திவால் ஆகிவிட்டது.

இந்தியாவின் ஜனநாயகம் பற்றி ராகுல் தனது வெட்கக்கேடான கருத்துக்களால் அவமதிக்கிறார். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் போன்ற வெளிநாடுகளிடம் இந்தியாவின் உள் விவகாரங்களை பற்றி பேசியது ஏற்றுக் கொள்ள முடியாது. நம் நாட்டில் தலையிட வெளிநாடுகளை அழைத்தது தவறு. இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்று கூறியது மன உளைச்சலை ஏற்படுத்தியது. இவ்வாறு அவர் பேசினார்.