டாமினோஸ் பீசாவின் முன்னாள் சி.இ.ஓ., ரிட்ச் அலிசன் 2021ல் தனக்கு மற்றும் குடும்பத்தாருக்கு என பீசாவுக்காக ரூ.3 லட்சம் செலவு செய்துள்ளார். தற்போதைய சி.இ.ஓ., ரஸ்ஸல் வீனரும் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் பீசாவுக்கு என ரூ.2.2 லட்சம் செலவிட்டுள்ளனர்.
டாமினோஸ் பீசா உலகின் மிகப்பெரிய சங்கிலித் தொடர் உணவகங்களில் ஒன்று. ரிட்ச் ஆலிசன் இங்கு 2018 முதல் கடந்த ஆண்டு வரை சி.இ.ஓ.,வாக இருந்தார். 2014ல் டாமினோஸில் இணைந்தவர் அப்போது டாமினோஸ் சர்வதேச பிரிவின் தலைவராக செயல்பட்டார். அதற்கு முன் பெயின் & கம்பெனி எனும் தொழில் ஆலோசனை நிறுவனத்தில் 13 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினார். அங்கு பல்வேறு உலகப் புகழ்பெற்ற உணவக நிறுவனங்களுக்காக வேலை பார்த்துள்ளார். அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் இளங்கலை தொழில் நிர்வாகமும், பிசினஸ் ஸ்கூல் ஒன்றில் எம்.பி.ஏ.,வும் பயின்றார்.
![]()
|