குமாரபாளையம்: குமாரபாளையம் தாலுகா, மோடமங்கலம் கிராமத்தில், ஏப்., 12ல் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது. அன்று கலெக்டர் ஸ்ரேயா சிங் கலந்துகொண்டு, மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய உள்ளார்.
இதையொட்டி, திருச்செங்கோடு
ஆர்.டி.ஓ., கவுசல்யாவிடம், மோடமங் கலம் இ - சேவை மையத்தில், மக்கள் தங்கள் குறைகளை முன்கூட்டியே நிவர்த்தி செய்துகொள்ளும் வகையில், மனுக்களை வழங்கினர்.
இதில், பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, ஒரே பட்டாவாக மாற்றுதல், இலவச வீட்டுமனை பட்டா, உட்பிரிவு பட்டா, புதிய ரேஷன் கார்டு உள்ளிட்ட, 144 மனுக்களை வழங்கினர். தாசில்தார் சண்முகவேலு, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தங்கம், ஆர்.ஐ., கார்த்திகா, வி.ஏ.ஓ., சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.