மதுரையின் அடையாளமாக விளங்கும் ஜிகர்தண்டாவை அவ்வளவு எளிதில் தவிர்க்க முடியாது. பல பகுதிகளில் ஜிகர்தண்டா ஷாப்கள் இருந்தாலும், மதுரையில் தயாராகும் ஜிகர்தண்டாவிற்குத் தனி ருசி தான். இந்த சுவையான ஜிகர்தண்டாவை வீட்டிலேயே செய்வது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
பால் - 1 கப்
நன்னாரி சிரப் - 4ஸ்பூன்
பாதாம் பிசின் - 2ஸ்பூன்
வெள்ளைச்சர்க்கரை - 1.2கப்
ஐஸ்கீரிம் - 1கப்
பால்கோவா - 2ஸ்பூன்
செய்முறை
முதலில் பாதாம் பிசினை 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
ஒரு கிளாஸில் பாதாம் பிசின் 2ஸ்பூன், நன்னாரி சிரப் 4ஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் ஐஸ்கீரிம் மற்றும் பால்கோவா ஒரு ஸ்பூன் சேர்க்க வேண்டும். அடுத்துக் காய்ச்சிய பாலை ஊற்றி நன்கு கிளற வேண்டும். மீண்டும் அதன் மீது ஐஸ்கீரிமை சேர்க்கனும்.
இறுதியாக நன்னாரி சிரப்பை மேலே ஊற்றி எடுத்தால் சுவையான மதுரை ஜிகர்தண்டா ரெடி.
குறிப்பு
பாலை சிம்மில் வைத்து பாதியாகக் குறையும் வரை காய்ச்ச வேண்டும். அதேபோல் ஜிகர்தண்டா செய்வதற்கு என்று கடைகளில் தனியாக ஐஸ்கீரிம்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.
Advertisement