வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ஒற்றுமை, ஒழுக்கம் ஆகியவை விளையாட்டின் மூலம் கிடைக்கின்றன என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் தமிழக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலை.,யின் 13வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் தமிழக கவர்னர் ரவி மாணவ- மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, பல்கலை துணைவேந்தர் சுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பேசியதாவது: கலாச்சாரம், சமூக உறவை மேம்படுத்துவதில் விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒற்றுமை, ஒழுக்கம் ஆகியவை விளையாட்டின் மூலம் கிடைக்கின்றன. ரவிச்சந்திரன் அஸ்வின், சரத் கமல், ஜோஸ்னா சின்னப்பா தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கு கிடைத்த பெருமை. இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கிடையே கவர்னர் ரவியை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ராஜ்பவனில் சந்தித்தார். மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி சந்தித்தார்.
