சென்னையை பரபரப்பான நகரமாக மட்டுமே பார்த்திருப்பீர்கள். ஆனால், சென்னையை சுற்றி இயற்கை அழகு நிறைந்த எத்தனை இடங்கள் இருக்கிறது தெரியுமா? சென்னைக்கு அருகில் அருவிகள், டிரெக்கிங் ஸ்பாட் என த்ரில் அனுபவங்களை தரும் பல இடங்கள் உள்ளன. வார நாட்களின் பரபரப்பிலிருந்து விடுபட்டு ரிலாக்ஸாக வேண்டுமானால் ஞாயிறு அல்லது விடுமுறை நாட்களில் இந்த இடங்களுக்கு ஒரு ஜாலி ட்ரிப் சென்று வரலாம். அத்தகைய சூப்பரான இடங்கள் சிலவற்றை இங்கே காண்போம்.
நாகலாபுரம்
![]()
|
சென்னையிலிருந்து 90 கி.மீ., தொலைவில், ஆந்திரா எல்லையில் அமைந்துள்ளது நாகலாபுரம். ஒரு நாள் சுற்றுலா சென்றுவர இது சிறந்த இடம். இந்த மலைப்பிரதேசத்தில் மொத்தம் 5 அருவிகள் உள்ளன. இங்கு சுடுமணல், சிற்றோடைகள், கூழாங்கற்கள், செடிகொடிகள் மற்றும் மேடு பள்ளங்கள் என எல்லாவற்றையும் கடந்து சென்றால்தான் அருவியை அடைய முடியும். இங்குள்ள அருவிக்கு எப்போதும் சீசன்தான். இந்த இடத்துக்கு குடும்பத்துடன் சேர்ந்து வந்து ஜாலியாக குளித்து மகிழலாம். மேலும், இங்கு டிரெக்கிங் போக விரும்பினால் கைடுகளின் உதவியை நாடலாம்.
தடா அருவி
![]() Advertisement
|
உடும்பமடுகு என்று அழைக்கப்படும் தடா அருவி சென்னையிலிருந்து ஆந்திரா செல்லும் வழியில் 92 கி.மீ., தொலைவில், சித்தூர் மாவட்டம் வரதப்பாளையம் அருகில் அமைந்துள்ளது. அருவி வரை வாகனங்களுக்கு அனுமதி உண்டு. அருவியில் நன்றாக குளித்து மகிழலாம். அதன்பின், டிரெக்கிங் போக விரும்பினால் 10 கி.மீ., தொலைவு பயணம் செய்து, அருவி உருவாகும் மலைப்பகுதியை அடையலாம். அடர்ந்த வனப்பகுதி, சலசலக்கும் நீரோடை, சுற்றிலும் அமைதியான இயற்கை சூழல் என தடா உங்களுக்கு மகிழ்ச்சிவூட்டும்.
காஞ்சனகிரி மலைகள்
![]()
|
சென்னையிலிருந்து 100 கி.மீ., தொலைவில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அழகிய இடம் சென்னை வாசிகளிடையே அதிகம் பிரபலம் ஆகாத இடம் என்று தான் சொல்ல வேண்டும். எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று சமவெளிகளும், குன்றுகளும், மலைகளும் நாம் ஏதோ ஒரு ஹில் ஸ்டேஷனில் இருப்பது போன்ற உணர்வை தருகிறது. இந்த இடத்துக்கு நீங்கள் பைக் அல்லது காரில் வருவதே மட்டுமே சாத்தியம். சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு நீங்கள் மலையேற்றம் போோலாம். மலை உச்சியை அடைந்த பிறகு, மலை ஏறிய களைப்பே தெரியாமல் போகும் அளவுக்கு அழகிய காட்சிகள் உங்கள் மனதை மயக்கிவிடும். இங்கு நீர்வீழ்ச்சி எதுவும் கிடையாது, ஆனால் இயற்கை அழகை பார்த்து ரசிக்க இது ஒரு சரியான ஸ்பாட்.
தலகோனா நீர்வீழ்ச்சி
![]()
|
சென்னையிலிருந்து 192 கி.மீ., தொலைவில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேசிய பூங்காவில் யெர்ராவரி மண்டலத்தின் நெரபைலு கிராமத்துக்கு அருகில் இந்த தலகோனா நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இயற்கை அழகு மற்றும் பசுமையால் சூழப்பட்ட அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் இந்த நீர்வீழ்ச்சிகள் அமைந்துள்ளன. நீங்கள் இங்கு செல்ல அரசுபேருந்து அல்லது சொந்த வாகனத்தை பயன்படுத்தலாம். பார்க்கிங்கில் இருந்து சரியாக ஒன்றரை கி.மீ., நடந்தால் நீர்வீழ்ச்சியை அடைந்திடலாம். நீர்வீழ்ச்சியில் இருந்து விழும் நீரால் ஆங்காங்கே சிறு சிறு குளங்கள், நீரோடைகள் உருவாகி இருப்பதை ரசித்துக் கொண்டே செல்லலாம். 270 அடி உயரத்தில் இருந்து விழும் நீர்வீழ்ச்சியை பார்ப்பதற்கே மிகவும் பிரமிப்பாக இருக்கும்.
கைலாசகோனா நீர்வீழ்ச்சி
![]()
|