வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காத, தேர்தலில் பணம் செலவழிக்காத ஒரு தூய்மையான அரசியல் பாதையை நோக்கி நான் பயணித்து கொண்டிருக்கிறேன். இதற்கு தமிழக மக்களும் தயாராகிவிட்டதாக நானும் உணர்கிறேன் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: கூட்டணி குறித்து பேசுவதற்கான நேரம் வரும் போது விரிவாக பேசுகிறேன். கட்சிக்குள் சில கருத்துகள், பேசிய கருத்து மீடியாவில் விவாதம் நடக்கிறது.
கட்சியின் தலைவனாக இருந்தாலும், தமிழகத்தில் ' கிளீன் பாலிடிக்ஸ்க்கான நேரம் வந்துவிட்டதாக நம்புகிறேன். அந்த 'கிளீன் பாலிடிக்ஸ்' அச்சாரம் என்பது பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திப்பது தான். பணம் கொடுத்து எந்த தேர்தலை யார் சந்தித்தாலும், நாங்கள் உன்னதமான அரசியலை செய்கிறோம் .
தமிழக அரசியல் களத்தில் பணம் இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது என்ற அளவுக்கு அரசியல் வந்துள்ளது. அதில் ஒரு தரம் மட்டும் மாறிவிட்டது. ஆளுங்கட்சியாக இருந்தால் இவ்வளவு, எதிர்க்கட்சியாக இருந்தால் கொஞ்சம் குறைச்சு கொடுத்ததால் மக்கள் ஏற்றுகொள்வார்கள் என்ற அளவுக்கு அரசியல் மாறியிருச்சு. எனக்கு அதில் உடன்பாடு இல்லை. தனிமனினாகவும், பா.ஜ.,வின் தொண்டனாகவும், மாநில தலைவராகவும் அதேபோன்ற தேர்தலை சந்திப்பதில் உடன்பாடு இல்லை.

அதேநேரத்தில் அரசியல் மாற்றம் எனக்கூறும்போது, அரசியலை முன்னெடுக்கும் போது எடுக்கும் உத்திகள், பிரசாரத்தில் சந்திக்கும் போது எடுக்கும் உத்திகள், மக்களை சந்திக்கும்போது உத்திகள் 'கிளீன்' ஆக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்த கட்சியால் 'கிளீன் பாலிடிக்ஸ்' கொடுக்க முடியும் என மக்களுக்கு அந்த நம்பிக்கைய கொடுக்கணும்.
அதனால்,சில கருத்துகளை தலைவர்களிடம் பகிர்ந்துள்ளேன். அதில் உறுதியாக உள்ளேன். அதில் மாற்றுக்கருத்து இல்லை. எந்த கட்சிக்கும் எதிராகவும் இல்லை. எல்லா கட்சிகளும் அவரவர் பயணத்தில் அவர்களுக்கு சரி என எதை நினைக்கிறார்களோ, அதில் அரசியல் செய்கிறார்கள். அவுங்க அரசியல் நிலைப்பாடு செய்வது தவறு என சொல்லும் அதிகாரம் எனக்கு இல்லை. அந்த மாதிரி அரசியல் செய்யக்கூடாது. அந்த மாதிரி செய்யணும்னு சொல்ற அதிகாரமும் எனக்கு கிடையாது.
இந்த காலகட்டத்தில் 2 ஆண்டு பாஜ., மாநில தலைவராக பதவி வகித்த பிறகு, தமிழக அரசியலை உற்று நோக்கிய பிறகு, தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் பயணம் செய்துள்ளேன். காரில் இருந்து நடந்து போயிருக்கிறேன். நான் உறுதியாக நம்புகிறேன். அரசியல் களத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கு , நேர்மையான அரசியலுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்காத அரசியலுக்கு மக்கள் காத்திருக்கின்றார்கள்.
எல்லாவற்றையும் தாண்டி நேர்மையான முறையில் மக்களிடம் முறையிட்டு, அவர்களின் வாக்குகளை பெறுவதற்கு நேரம் வந்துவிட்டது என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடு.
நான் ஏற்கனவே சொன்னது போல இந்த கட்சி கூட்டணி, அந்த கட்சி கூட்டணி என பேசுகிற ஆள் நான் கிடையாது. நான் பேசுகின்ற அதிகாரமும் இந்த நேரத்தில் எனக்கு இல்லை. வெகுவிரைவில் பேசுகிறேன். பா.ஜ., காரனாக பேசுகிறேன். ஆனால், உறுதியாக தெளிவாக இருக்கிறேன். இப்படிப்பட்ட அரசியல் முன்னெடுப்பில் மட்டும் தான் என்னை இணைத்து கொள்ள வேண்டும் என்பதில். இதில் எந்த மாற்றமும் இல்லை. அதில் உறுதியாக இருக்கிறேன்.
தமிழகத்தில் மாற்றம்
நான் அரசியலுக்கு வந்த காலத்தில் அரவக்குறிச்சியில் நானும் போட்டி போட்டிருக்கேன். அரசியல்ல என்ன நடக்கும்னு தெரியாத நேரம் அது. அரசியல் உத்திகள் என்னனு தெரியாத நேரம். ஆனா இன்னைக்கு 2 வருஷம் முடிந்த பிறகு மனசை ஒருமுகப்படுத்தி கொண்டு வந்துட்டேன்.
அரசியல் என்பது நேர்மையாக, நாணயமாக, பணம் இல்லாத அரசியலை முன்னெடுக்க வேண்டும். இல்லாட்டி, தமிழகத்தில் மாற்றம் என்பது ஆயிரம் வருடங்கள் ஆனாலும் நடக்காது என்ற எண்ணோட்டத்திற்கு வந்துட்டேன். அதை என்னுடைய கட்சிக்குள்ளே பேச ஆரம்பிச்சிருக்கிறேன். தலைவர்கள், தெண்டர்களிடம் பேச ஆரம்பிச்சிருக்கிறேன். வரும் வருஷங்களில் இன்னும் ஆக்ரோஷமாக பேசுவேன்.
கூட்டணி பற்றி அதற்கான நேரம் வரும் போது எங்கள் தலைவர்கள் சொல்வார்கள். மறுபடியம் நான் சொல்கின்றேன் எந்த கட்சிக்கும் எதிரி கிடையாது. யாருக்கும் எதிரி கிடையாது எந்த தலைவருக்கும் எதிரி கிடையாது.
என்னுடைய மனசுல நான் ஒரு வேலைய விட்டுவிட்டு உங்களை போல் மாற்றத்தை கொடுக்க வேண்டும் என வந்து சில தவறுகளை செய்வதற்கு தயாராக இல்லை. அந்த அடிப்படையில் சில வார்த்தைகளை அன்று பேசியிருந்தேன். நேரம் வரும் போது இன்னும் விவரமாக தீர்க்கமாக சொல்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.