சென்னை: பன்னீர்செல்வம் ஆதரவாளரான மனோஜ்பாண்டியன் கூறியதாவது: தேர்தல் முடிவினை அறிவிக்கக்கூடாது என்ற உத்தரவினை எங்களுக்கான வெற்றியாக பார்க்கிறோம். நியாயம், தர்மம், எங்கள் பக்கம் உள்ளது. அது எங்களது அடிப்படை உரிமை. எங்களை நீக்குவதற்கு பழனிசாமி யார்? கூவத்தூரில் இருந்த கும்பல் எங்களை நீக்கினால், அது செல்லுமா? அதனால் நீதிமன்றத்தை நாடி நியாயத்தை பாதுகாத்து கொண்டிருக்கிறோம். இது தேர்தலா அல்லது பிக்பாக்கெட்டா என்பதை மக்கள் அறிவார்கள். இன்றைக்கு தேர்தல் வைத்தால், பழனிசாமியை எதிர்த்து போட்டியிடுவேன் என பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்திலும் கூறியுள்ளார்.
நியாயம் தர்மம் வெல்லும்வரை நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உள்ளன என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அதனை உறுதிபடுத்தவே போராடுகிறோம். தேர்தல் வையுங்கள். யாருக்கு ஆதரவு, யாருக்கு தொண்டர்கள் பலம் இருக்கிறது என பார்ப்போம். குறுக்கு வழியில் பொதுச்செயலாளர் ஆக முயற்சித்தால் அதனை விட போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement