சாட் ஜிபிடி எனும் செயற்கை நுண்ணறிவு செயலி தற்போது பிரபலமாகி வருகிறது. இந்த செயலியை ஓபன்ஏஐ என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதன் சி.இ.ஓ., சாம் ஆல்ட்மேன், சாட் ஜிபிடி பெரிய அளவில் தவறான தகவல்களை பரப்புவதற்கு பயன்படுத்தப்படலாம் என்று தனக்கு கவலை இருப்பதாக கூறினார்.
ஓபன் ஏஐ என்பது செயற்கை நுண்ணறிவு பற்றி ஆராய்ச்சி செய்து ஏஐ தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் நிறுவனம். அதன் தயாரிப்பு தான் சாட் ஜிபிடி. இதுவும் ஒரு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த செயலி தான். கூகுள் தேடுபொறி போன்று இங்கு வார்த்தைகளை மட்டுமின்றி முழு கேள்வியாகவே கேட்டு விடையைப் பெறலாம். சாட் ஜிபிடியில் ஜிபிடி என்பது Generative Pre-trained Transformer எனும் செயற்கை நுண்ணறிவுச் செயலாக்கம். அதாவது பதிவில் இருக்கும் தகவலை அலசி ஆராய்ந்து இறுதி முழுமையான தகவலை தருவது.
நவம்பர் 2022ல் இதன் முதல் வெர்ஷன் வந்தது. தற்போது ஜிபிடி 4 வெர்ஷனை கொண்டு வந்துள்ளனர். இதனை மல்டிமோடல் மாடல் என்கின்றனர். அதாவது வார்த்தைகள் மட்டுமின்றி படத்தையும் ஏற்றுக்கொண்டு பதில் தரும். சாட் ஜிபிடி வந்ததில் இருந்தே பல துறைகளில் பலரை வீட்டுக்கு அனுப்பிவிடும் என ஒரு சாரர், மனித மூளைக்கு இணையாக செயற்கை நுண்ணறிவால் வர முடியாது என மற்றொரு சாரர் கூறி வருகின்றனர்.
![]()
|
அதே சமயம், இந்த மாடல்கள் பெரிய அளவில் தவறான தகவல்களை பரப்புவதற்கு பயன்படுத்தப்படலாம் என்று கொஞ்சம் கவலைப்படுகிறேன். செயற்கை நுண்ணறிவின் திறன் கெட்டதற்கும் பயன்படலாம் என்ற அச்சம் உள்ளது. இந்த கண்டுபிடிப்பின் சாத்தியமான மோசமான விளைவுகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க, கட்டுப்பாட்டாளர்களும் சமூகமும் இணைந்து செயல்படுவது மிகவும் முக்கியம். உண்மையான தகவல்களின் முக்கிய ஆதாரமாக இந்த அமைப்பை பயன்படுத்த வேண்டாம். கிடைக்கும் தகவலை இரண்டு முறை சரிபார்க்கவும். இவ்வாறு கூறியுள்ளார்.