வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
சென்னை: ஸ்டாலின் இன்று முதல்வராக இருப்பதற்கு நான் தான் காரணம் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நான் ஓட்டை பிரிக்க வந்த ஆள் இல்லை. நான் நாட்டை பிடிக்க வந்த ஆள். நான் இல்லை என்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது. அதற்காக நான் திமுக வின் பீ டீம் ஆகிடுவேனா?. அரசியலில் நான் தான் ராஜா. நம்பர் ஒன்.
திமுக அரசு, காங்கிரஸ் கட்சிக்கு பயந்து கொண்டு சாந்தன், முருகன் உள்ளிட்ட 4 பேரை சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க தயங்குகிறது.

35 ஆண்டுகாலப் போராட்டம், சிறையிலிருந்து சிறப்பு முகாம் என்ற சித்திரவதை கூடத்தில் அடைப்பதற்காக அல்ல. சிறப்பு முகாமில் வைப்பதற்கு பதிலாக சிறையில் வைத்து விடுங்கள். அங்கே அவர்களுக்கு சகல வசதிகளும் உள்ளது. திமுக தேர்தல் நேரங்களில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் வெற்று வாக்குறுதி. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement