வீட்டிற்குள், ஏன் உங்கள் பெட் ரூமில் கூட சில 'இண்டோர் பிளான்ட்ஸ்' தாவரங்களை வளர்க்கலாம். இவை பார்க்க அழகாக இருப்பதுடன் உடல் நலத்துக்கும் நன்மைகள் தருகின்றன. குறிப்பாக காற்றில் உள்ள ரசாயன நச்சுக்களை நீக்கி சுத்தப்படுத்துகின்றன. மேலும், இவை உற்சாகத்தை அதிகரிப்பதாகவும், மன அழுத்தத்தை குறைப்பதாகவும் பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனவே, இவற்றை வீடுகளில் வளர்த்துப் நாம் பயன்பெறலாம்.
இங்கிலீஷ் ஐவி
![]()
|
எப்போதும் பச்சை பசேலெனப் படரும் கொடி தாவரம் இது. ஜன்னல் மீது அல்லது தொங்கும் தொட்டியில் படர்ந்து வளரும்போது மிக அழகாக காட்சியளிக்கும். இது காற்றிலிருந்து பார்மால்டிகைடு, அம்மோனியா, டோலுயின், ஆக்ஸைட், பென்சீன், சைலீன், டிரைகுளோரோ எத்திலீன் உள்ளிட்ட பல்வேறு நச்சுக்களை நீக்குவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குகிறது.
ஃப்ளோரிஸ்ட் க்ரைசான்தமம்
![]() Advertisement
|
கண்களுக்கு இதமளிக்கும் அழகிய பூச்செடி இது. இதன் பூக்களின் இதழ்களுக்கு நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. நெஞ்சு வலி, மயக்கம், வீக்கம், காய்ச்சல், சளி, உயரத்த அழுத்தம், டைப் 2 டயாபடீஸ் போன்ற நோய்களை சரி செய்யும் தன்மை கொண்டது. அதிக வெளிச்சத்தில் இது அசத்தலாக வளரும். இதன் மீது பூஞ்சை வளர்வதை தடுக்க இதன் தொட்டியில் நீர் வெளியேறும் வழி இருக்கட்டும். அறையிலும் நல்ல காற்றோட்டம் தேவை.
ஃப்ளெமிங்கோ லில்லி
![]()
|
வீட்டுக்கு அழகு சேர்க்கும் இது உங்களுக்கு புத்துணர்ச்சியும் அளிக்கும். அழகிய சிவப்பு மலரும் பளபளப்பான இலைகளும் கொண்ட ஃப்ளெமிங்கோ லில்லி, அதிக ஈரப்பதத்தை விரும்பும். ஆகவே, தொடர்ந்து நீர்த் தெளிந்து கொண்டிருந்தால் பார்க்க மிக அழகாக காட்சியளிக்கும். வீட்டுக் காற்றில் உள்ள பார்மால்டிகைடு, அம்மோனியா, டோலுயின், சைலீன் ஆகிய ந்ச்சு வாய்வுகளை இது நீக்குவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றன.
ப்ராட்லீஃப் லேடி பாம்
![]()
|
வீட்டில் உள்ள காற்றில் நிறைந்திருக்கும் மாசுகள் மற்றும் நச்சுக்களை நீக்கும் செடிகளில் இது முதன்மையாக உள்ளது. நச்சுக்களை நீக்கி காற்றை சுவாசிக்க உகந்ததாக இது மாற்றுகிறது. இதன் வேரை கசாயம் செய்து குடித்தால், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
கோல்டன் போதோஸ்
![]()
|
இதமான பச்சை நிற இலைகளுடன் அழக்கூடும் இதற்கு 'டெவில்ஸ் ஐவி' என்ற பெயரும் உண்டு. இது எண்ணற்ற ரகங்களில் இருக்கிறது. 8 அடி உயரம் வரை வளரக்கூடியது. இது நச்சுக்களை வெளியேற்றி காற்றை சுத்தப்படுத்தும் ஆற்றல் வாய்ந்த தாவரம். மண் காய்ந்திருக்கும் போது நீர் ஊற்றினால் போதும். பெரிதாக வளர்ந்தால் தண்டுகளை கொஞ்சம் கத்திரித்து வைக்கலாம். நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகள் அணுகாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
மூங்கில் பனைகள்
![]()
|