காலை மெல்லோட்டம் அல்லது வேகமாக ஓடும் பயிற்சி உடலுக்கு பல விதங்களில் நன்மை சேர்க்கும். இதய நோய்கள் தடுக்கப்பட்டு மகிழ்ச்சி ஹார்மோன்கள் அதிகளவில் சுரக்கும். பதின்பருவத்தினர், இளைஞர்கள் காலை ஸ்னீக்கர் அணிந்து வேகமாக ஓடுவர். 15 நிமிடங்களில் ஒரு கி.மீ., தூரத்தை அவர்கள் சுலபமாகக் கடந்துவிடுவர்.
ஆனால் 40 வயது கடந்தவர்களால் வேகமாக ஓடமுடியாது. இவர்கள் மெல்லோட்டத்தில் ஈடுபடுவர். மெதுவாக ஓடுவதால் உடல் கலோரிகள் அதிகளவில் எரிக்கப்படாது என சிலர் நினைப்பர்.
ஆனால் இது தவறு. நீங்கள் உசைன் போல்டுக்கு டஃப் கொடுக்கும் வகையில் மணிக்கு 70 கி.மீ., வேகத்தில் ஓடினாலும், மிதவேகத்தில் மணிக்கு 15 கி.மீ., வேகத்தில் ஓடினாலும், காலை சைக்கிளிங் செய்தாலும் கலோரிகள் எரிக்கப்படும் அளவு ஒன்றுதான் என்கின்றனர் விஞ்ஞானிகள். தினமும் காலை இவ்வளவு கி.மீ., ஓடி ஆகவேண்டும் என முதலில் இலக்கு நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.
![]()
|
முடிந்தால் வேகமாக ஓடுங்கள். உடற்பருமன், மூட்டுவலி உடையவராக இருந்தால் மித வேகத்தில் ஓடலாம். இடையில் மூச்சு வாங்கினால் நடைபயின்று பின்னர் ஓட்டத்தைத் தொடரலாம். தொடர்ந்து ஒருமாதம் ஓடி பயிற்சி செய்தாலே எலும்பு சந்திப்புகளில் உள்ள ஜவ்வு தளர்ந்து கால்கள் உறுதியாகி உங்கள் ஓட்டத்தின் வேகம் அதிகரிப்பதை உங்களால் உணர முடியும். ஜிம் பயிற்சி மேற்கொள்பவர்கள் டிரெட்மில்லில் இந்தப் பயிற்சியை மேற்கொள்ளலாம்.