வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
புதுடில்லி: கடந்த 45 நாளில் மாரடைப்பால் மரணடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது
![]()
|
கிரிக்கெட் விளையாட்டின் மீது இளைஞர்கள் நாடு முழுவதும் மோகம் கொண்டுள்ளனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் வீதி மற்றும் மைதானங்களில் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். இதற்கு நேரம் காலம் என வித்தியாசம் இல்லாமல் பகல் இரவு நேர ஆட்டங்களாக விளையாடி வருகின்றனர்.
அதே நேரத்தில் பந்து வீச்சில் எதிர் அணியை சுருட்டி விடும் அளவிற்கு விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் சுருண்டு விழுந்து பலியாகும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த பிப்., மாதத்தில் தெலங்கானா மாநிலம் நான்டெட்டில் விளையாடிக்கொண்டிருந்த 25 வயது இளைஞர் மைதானத்தில் சுருண்டு விழுந்து இறந்தார். தொடர்ந்து ஹை தராபாத்தில் உடற்பயிற்சி ஜிம்மில் பயிற்சி செய்து கொண்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் மாரடைப்பால் இறந்தார்.
![]()
|
இந்நிலையில் இன்று( 19 ம் தேதி) குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது 45 வயது நபர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
இளம் வயதினர் கடந்த 45 நாட்களில் மாரடைப்பு காரணமாக 8 பேர் மரணம் அடைந்திருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement