புதுடில்லி : பெண்கள் பாலியல் வன்கொடுமை குறித்து, கருத்து தெரிவித்த விவகாரத்தில், ராகுல் அளித்துள்ள பதிலில், எந்த தகவலும் இல்லை என, டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
![]()
|
ராகுல் நடத்திய பாரத ஒற்றுமை யாத்திரையின்போது, பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண், ஒருவர் தன்னிடம் வந்து பேசி, பல விபரங்களை தெரிவித்ததாக ராகுல் காஷ்மீரில் பேசினார்.
பாதிக்கப்பட்ட பெண் குறித்த விபரங்களை, தங்களுடன் பகிர்ந்து கொள்ளும்படி ராகுலுக்கு, டில்லி போலீசார், ‛நோட்டீஸ்' அளித்தனர்.
ஐந்து நாட்களில், மூன்றாவது முறையாக, போலீசார் ராகுலிடம் விசாரிக்க முயற்சி மேற்கொண்டு வந்தனர்.
இதையடுத்து, இன்று (மார்ச்., 20)ம் தேதி, மாலை, முதற்கட்டமாக, நான்கு பக்க பதிலை, டில்லி போலீசாருக்கு, ராகுல் அனுப்பியதாக, தகவல் வெளியாகி உள்ளது.
![]()
|
ராகுல் கூறியுள்ளதாவது : மார்ச்.,16ம் தேதி போலீசார், என்னை அணுகியபோதே, பதில் தர, 7 முதல் 8 நாட்கள் அவகாசம் கேட்டிருந்தேன். எனினும், இரண்டு நாட்கள் கழித்து, மீண்டும் என்னை அணுகி உள்ளனர்.
ஆளும் கட்சியில் தலைவர்களிடமும், இதுபோலவே போலீசார் நடந்து கொள்வார்களா?
ஸ்ரீநகரில், நான் பேசி, 45 நாட்களுக்கு பின், போலீசார், அவசரம் காட்டுவது, அதானி விவகாரத்தில், லோக்சபாவுக்கு உள்ளேயும், வெளியேயும், காங்., தரப்பில் எடுக்கப்பட்ட நிலைப்பாட்டுக்காகவா?
டில்லி போலீசாரின் இந்த நடவடிக்கை, ‛முன்னோடியில்லாதது' போல் உள்ளது.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
டில்லி போலீசார் கூறுகையில்,‛ ராகுலின், பதில் கிடைத்துள்ளது. ஆனால், எந்த தகவலும் அதில், பகிரப்படவில்லை. இதையடுத்து, அடுத்தகட்ட விசாரணையை துவக்க, முடிவு செய்துள்ளோம்,' என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement