ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 22 மாதங்களில் தேசிய முதலீட்டாளர்கள்5000 பேர் ஜம்மு காஷ்மீரில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். என துணை நிலை ஆளுநர் கூறி உள்ளார்.

இது குறித்து துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறியதாவது: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு சட்டப்பிரிவு 370 ஐ நீக்கிய பின்னர் முதல் சர்வதேச வணிக வளாகம் அமைய உள்ளது.
ரூ.250 கோடி மதிப்பில் சுமார் 10 லட்சம் ச.அடி பரப்பளவில் ஸ்ரீநகரில் உள்ள செம்போரா பகுதியில் அமைய உள்ளது. வரும் 2026 ம் ஆண்டுக்குள் இவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும். இந்த மாலில் 500கடைகள் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் 13 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்டை சேர்ந்த எமார் குழும நிறுவனம் சார்பில் இந்த மால் அமைக்கப்பட உள்ளது. இந்த மாலில் ஆறு மல்டிபிளக்ஸ்கள், ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டல் உள்ளிட்டவை அமைய உள்ளது. மொத்தத்தில் எமார் குழுமம் ஜம்முவில் சுமார் 500 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்ய உள்ளது.

தொடர்ந்து அவர் கூறுகையில் நாட்டிலேயே தெலங்கானா மாநிலத்திற்கு பின்னர் ஜம்முவில் தான் பெண்களுக்கு என தனி தொழிற்பேட்டை கொண்டுள்ளது. உதம்பூர் மாவட்டத்தில் அமைய உள்ள இந்த தொழில் பேட்டை பெண் தொழில் முனைவோர்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 22 மாதங்களில் தேசிய முதலீட்டாளர்கள் 5000 பேர் ஜம்முவில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்து உள்ளனர். நாள்தோறும் எட்டு முதலீட்டாளர்கள் பதிவு செய்கின்றனர். என கூறினார்.
கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370 -ஐ ஆளுகின்ற மத்திய பாஜ அரசு ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement