மனித டிஎன்ஏ-வில் டேட்டா ஸ்டோரேஜ் எதிர்காலத்தில் சாத்தியப்படுமா?

Updated : மார் 19, 2023 | Added : மார் 19, 2023 | |
Advertisement
நமது டாக்குமென்ட்கள், போட்டோ, வீடியோக்களைப் பாதுகாக்க இன்று மின்னணுப் பொருட்கள் சந்தையில் பல மின்னணு சாதனங்கள் உள்ளன. சிடி, டிவிடி காலம் போய் பென் டிரைவ், ஹார்ட் டிரைவ், சாலிட் ஸ்டேட் டிரைவ், ஹீலியம் டிரைவ் என பல சாதனங்கள் நமது டேட்டாக்களை சேவ் செய்து ஆண்டுக் கணக்கில் பத்திரமாகப் பாதுகாக்க உதவுகின்றன. இதுதவிர கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பம் நாளுக்குநாள்
data storage, digital data storage future, டேட்டா ஸ்டோரேஜ், எதிர்கால டேட்டா ஸ்டோரேஜ்

நமது டாக்குமென்ட்கள், போட்டோ, வீடியோக்களைப் பாதுகாக்க இன்று மின்னணுப் பொருட்கள் சந்தையில் பல மின்னணு சாதனங்கள் உள்ளன. சிடி, டிவிடி காலம் போய் பென் டிரைவ், ஹார்ட் டிரைவ், சாலிட் ஸ்டேட் டிரைவ், ஹீலியம் டிரைவ் என பல சாதனங்கள் நமது டேட்டாக்களை சேவ் செய்து ஆண்டுக் கணக்கில் பத்திரமாகப் பாதுகாக்க உதவுகின்றன.

இதுதவிர கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பம் நாளுக்குநாள் வளர்ந்து வருவதால் கூகுள் உள்ளிட்ட பல தனியார் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆன்லைன் கிளவுட் டேட்டா ஸ்டோரேஜ் வசதியை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகின்றன. ஆன்லைன் கிளவுட் டேட்டா-க்களை உலகின் எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து தகவல்களை எடுத்துக்கொள்ள முடியும். எனவே இதற்கு வரவேற்பு அதிகரிக்கிறது. அதே சமயத்தில் ஹார்ட் டிஸ்க் போன்ற மின்னணு சாதனங்களில் ரகசிய டேட்டாக்களை பதிவேற்ற பலர் விரும்புகின்றனர்.


latest tamil news


இதனால் தற்போது அமேசான் போன்ற பல ஆன்லைன் வர்த்தகத் தளங்களில் ஹார்ட் டிரைவ், சாலிட் ஸ்டேட் டிரைவ்களின் விற்பனை அதிகரிக்கிறது. சீகேட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்த டிரைவ்களை 4 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய்வரை விற்று வருகின்றன. இன்று 5 டிபி ஹார்ட் டிஸ்க்கை 9 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிவிட முடியும். உங்கள் வாழ்நாள் முழுக்க நீங்கள் எடுக்கும் போட்டோ, வீடியோக்களை சேவ் செய்ய இந்த மெமரியே போதுமானது..!

டேட்டா ஸ்டோரேஜ் தொழில்நுட்பத்தில் இன்னும் பலவித ஆராய்ச்சிகள் நடைபெற்ற வண்ணமே உள்ளன. எதிர்காலத்தில் மனித டிஎன்ஏ மாலிகியூல்களில் டேட்டாக்களை ஸ்டோர் செய்ய முடியும் என்கின்றனர் உயிரியல் விஞ்ஞானிகள். இதனைக் கேட்பதற்கு சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தின் கதைபோல இருந்தாலும் டேட்டா ஸ்டோரேஜ் என்பது மனித இனத்துக்கு மிகவும் அவசியமான ஒன்று என்பதால், எதிர்காலத்தில் இதுகூட சாத்தியப்படலாம்.


latest tamil news

2025 ஆம் ஆண்டுதுவங்கி உலகம் முழுக்க உள்ள மனித இனத்துக்கு, ஆண்டுக்கு 160 செட்டாபைட் (zettabytes) மின்னணு டேட்டா ஸ்டோரேஜ் தேவைப்படும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஒரு செட்டாபைட் என்பது ஒரு லட்சம் கோடி ஜிகாபைட் (gigabytes) சேர்ந்தது ஆகும்..!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X