புதுடில்லி :‛‛ஓ.டி.டி., தளங்களில், ஆபாசத்தையும், துஷ்பிரயோகத்தையும் தடுக்க, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர், அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர், அனுராக் தாக்கூர், இன்று (மார்ச்., 19)ம் தேதி, சமூக வலைதளத்தில், வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியுள்ளதாவது:
படைப்பாற்றல் என்ற பெயரில், தவறான மொழி மற்றும் நாகரீகமற்ற நடத்தையை பொறுத்துக்கொள்ள முடியாது. ஓ.டி.டி., தளங்களில், அதிகரித்து வரும், ஆபாசமான உள்ளடக்கங்கள் குறித்து, அரசுக்கு வரும் புகார்கள், தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.
![]()
|
![]()
|
இது தொடர்பாக, சட்ட விதிகளில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் கூட, அதில் இருந்தும், பின்வாங்க மாட்டோம். ஆபாசத்தையும் துஷ்பிரயோகத்தையும் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
Advertisement