ஸ்ரீபெரும்புதுார்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுாரில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் கடந்த 2008 ம் ஆண்டு முதல் ஸ்ரீபெரும்புதுார் அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் உள்ள இரண்டு வகுப்பறை கட்டடத்தில் இயங்கியது.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி சிவன்தாங்கல் பகுதியில் 8 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டி முடிக்கப்பட்டு 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது.
இதையடுத்து நீதிமன்றம், ஸ்ரீபெரும்புதுார் அரசு பள்ளி கட்டடத்தில் இருந்து, புதிய நீதிமன்ற கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
நீதிமன்றம் இடமாற்றம் செய்யப்பட்டு மூன்று வருடங்களாகியும், நீதிமன்றம் இயங்கிய பள்ளி கட்டடம் மீண்டும் அரசு பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படாமல் உள்ளது.
நீதிமன்றம் இயங்கிய பள்ளி கட்டடத்தில் ஆறு வகுப்பறைகள் உள்ளது. இந்த கட்டடத்தை மீண்டும் பள்ளியிடமே ஒப்படைத்தால் கூடுதலாக ஆறு வகுப்பறைகள் கிடைக்கும்.
இதனால், அரசு பள்ளி மாணவர்கள் இடநெருக்கடியின்றி கல்வி கற்க முடியும். எனவே, நீதிமன்ற கட்டத்தை மீண்டும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.