வாலாஜாபாத்: செங்கல்பட்டு - அரக்கோணம் ரயில் வழித்தடத்தில், திருமால்பூர் ரயில் நிலையம் உள்ளது.
இங்கிருந்து காஞ்சிபுரம், வாலாஜாபாத், பாலுார், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர், சென்னை கடற்கரை மார்க்கம் மற்றும் தக்கோலம், அரக்கோணம், திருத்தணி, திருப்பதி வழியாக, தினமும் ஆயிரக்கணக்கானோர் ரயிலில் பயணம்செய்கின்றனர்.
காலை நேரங்களில், டிக்கெட் கவுன்டர்களில் டிக்கெட் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கட் எடுக்க கூட்டமாக இருப்பதால், டிக்கெட் வாங்குவதற்கு கால தாமதம் ஏற்படுகிறது.
கூடுதலாக, கவுன்டர்கள் வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, திருமால்பூர் ரயில் நிலையத்தில், தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரத்தை, ரயில்வே நிர்வாகம் அமைத்துள்ளது.
இதற்காக, டிக்கெட் வினியோகம் செய்யும் ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளது. ஒப்பந்தம் எடுப்பவர், பணியாளர் ஒருவரை நியமித்து, டிக்கெட் வழங்கும் பணியை துவக்குவார் என, எதிர்பார்கப்படுகிறது.