உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது கடல்மங்கலம் கிராமம். இக்கிராம மக்களின் குடிநீர் தேவைக்கான 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இருப்பினும் கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுபாடு பிரச்னை நிலவுகிறது.
இதனால், மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப கடல்மங்கலத்தில் கூடுதல் குடிநீர் ஆதாரம் ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதியினர் கோரி வந்தனர்.
அதன்படி 'ஜல் ஜீவன் மிஷன்' திட்ட நிதியின் கீழ், காலனி பகுதிக்கென 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.
பணி முழுமையாக நிறைவு பெற்று ஓராண்டாகியும், இதுவரை தண்ணீர் ஏற்றி, அத்தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் மேற்கொள்ளப்படாமல் உள்ளது.
கோடைக்காலம் துவங்க உள்ள நிலையில், புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பயன்பாடு இல்லாமல் வீணாவது குறித்து அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
எனவே, கடல்மங்கலத்தில் பணி முடிந்து தயார் நிலையில் உள்ள புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.