பிஸ்தா பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...

Updated : மார் 19, 2023 | Added : மார் 19, 2023 | |
Advertisement
'பிஸ்டாச்சியோ மில்க்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பச்சை நிற பிஸ்தா பால் காண்போரது கண்ணைக் கவரும். இதில் எக்கச்சக்கமான ஆரோக்கிய பலன்களும் உண்டு. பிஸ்தா பால் சாப்பிட்டால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன எனத் தெரிந்துகொள்வோமா?பிஸ்தாச்சியோ பொட்டாசியம், நல்ல கொழுப்பு, ஆன்டிஆக்ஸிடன்ட், கெட்ட கொலஸ்டிராலை எதிர்த்துப் போராடும் ஃபைடோஸ்டிரோல் உள்ளிட்டவை
pista milk, pista milk benefits, பிஸ்தா பால், பிஸ்தா பால் ஆரோக்கிய பலன்கள்

'பிஸ்டாச்சியோ மில்க்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பச்சை நிற பிஸ்தா பால் காண்போரது கண்ணைக் கவரும். இதில் எக்கச்சக்கமான ஆரோக்கிய பலன்களும் உண்டு. பிஸ்தா பால் சாப்பிட்டால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன எனத் தெரிந்துகொள்வோமா?

பிஸ்தாச்சியோ பொட்டாசியம், நல்ல கொழுப்பு, ஆன்டிஆக்ஸிடன்ட், கெட்ட கொலஸ்டிராலை எதிர்த்துப் போராடும் ஃபைடோஸ்டிரோல் உள்ளிட்டவை அதிகம் நிறைந்தது. வாழைப்பழத்தில் உள்ள ஆரோக்கியப் பலன்கள் பிஸ்தாவால் உடலுக்குக் கிடைக்கும். பிஸ்தா விதைகள் ஐஸ்கிரீம், மில்க் ஷேக் மட்டுமின்றி பால் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பாதாம் பாலுக்கு இணையாக பிஸ்தா பால் பல இடங்களில் பிரபலமானது.


latest tamil news


பிஸ்தா பயிரிட்டு வளர்த்து விற்பனைக்கு வருவது சாதாரண விஷயம் அல்ல. இதற்கு பலகட்ட பணியாளர்களின் உழைப்பு தேவை என்பதால் இதன் விலையும் அதிகம். முந்திரி, பாதாம், பிஸ்தா உள்ளிட்ட மூன்று பிரபல உணவுப் பொருட்களில் பிஸ்தாவே அதிக விலை கொண்டதாகும். பிஸ்தா பாக்கெட்களில் சூப்பர் மார்கெட்களில் விற்கப்படுகிறது. ஆனால் பிஸ்தா கிடைப்பது அரிது என்பதால் பாதாம் பால், கொழுப்பு நீக்கப்பட்ட ஸ்கிம்டு பால், நிலக்கடலை பால் போல எளிதில் ரெடிமேடாகக் கிடைக்காது. எனவே இதனை வீட்டிலேயே தயார் செய்யலாம்.

பிஸ்தா விதைகளை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் நிரப்பிய தண்ணீரில் ஊறவைத்து, காலை தோல் அகற்ற வேண்டும். பின்னர் பிஸ்தாவை பிளண்டர் அல்லது மிக்ஸியில் மையாக அரைத்து வடிகட்டினால் வருவதுதான் பிஸ்தா பால். இதில் சுவை சேர்க்க மேப்பல் ஹனி, நாட்டு சர்க்கரை பயன்படுத்தலாம். பிஸ்தா பாலில் சிறிதளவு சீஸ் சேர்க்கலாம். இதனை ஃபிரிட்ஜில் வைத்து மூன்று நாட்கள்வரை பருகலாம்.


latest tamil news


குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பச்சை நிற பிஸ்தா பால் அவர்களது உடலுக்கு ஏராளமான நன்மைகளை அள்ளித்தரும். குழந்தைகளின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு உதவும் பிஸ்தா பால், அவர்களது உடல் இயக்கத்துக்கும் வலு சேர்க்கும். பிஸ்தா பால் விலையுயர்ந்தது என்பதால் இது பலரால் புறக்கணிக்கப்படுகிறது. மாதம் ஒருமுறை பிஸ்தா பால் அருந்தினாலே உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X