உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒரக்காட்டுப்பேட்டை பகுதியை சேர்ந்த சத்யவாணி, 60 , நேற்று முன்தினம் சாலையில் நடந்து சென்ற போது, அதே பகுதியைச் சேர்ந்த சமீனா என்பவர் ஓட்டி வந்த 'ஸ்கூட்டியில்' லிப்ட் கேட்டு சென்றார்.
வீட்டின் அருகே வந்து சாலையோரம் இறங்கியபோது, காவியதண்டலத்தில் இருந்து, ஒரக்காட்டுப்பேட்டை நோக்கி வந்த இருசக்கர வாகனம் சத்யவாணி மீது மோதியது.
இதில், படுகாயம் அடைந்தவரை அப்பகுதியினர் மீட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்திருந்த அவர் உயிர் இழந்தார்.