காஞ்சிபுரம்: தமிழக அரசின் 'எண்ணும் எழுத்தும்' திட்டம், 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை கற்கும் மாணவர்களுக்கான நிலை அடிப்படையிலான கற்பித்தல் முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்புகளை ஈடுசெய்யும் விதமாக, மாணவர்கள் எளிமையாகவும், ஆர்வமாகவும் கற்கும் விதத்தில் திட்டம் வடிவமைக்கப்பட்டது.
கற்றல் கற்பித்தலால், குழந்தைகளிடமும் ஆசிரியர்களிடமும் ஏற்பட்டுள்ள தாக்கத்தை மக்களிடமும் முக்கியமாக பெற்றோரிடம் கொண்டுச் செல்ல 'எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம்' என்ற நிகழ்ச்சி மார்ச் 16ல் துவங்கியது. நாளை 21 வரை நடக்கிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும், 'எண்ணும் எழுத்தும் கொண்டாடுவோம்' திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கற்றல் கற்பித்தல், துணைக் கருவிகள் மற்றும் கற்பிக்கும் முறைகள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசார வாகனம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான வாகனத்தை கூடுதல் முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவவலர் வெற்றிசெல்வி துவக்கி வைத்தார்.
Advertisement