செய்யூர்: செய்யூர் சுற்றுவட்டார பகுதிகளில், எல்.என்., புரம், பாளையர்மடம், எல்லையம்மன் கோவில் போன்ற பகுதிகளில், கடந்த சில வாரங்களாக, 'பைக்' திருட்டு சம்பவம் தொடர்ந்து நடந்து வந்தது.
இது குறித்து, செய்யூர் போலீசார் வழக்கு பதிந்து, செய்யூர் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 'சிசிடிவி' கேமரா பதிவுகளின் மூலம், பைக் திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்களை தேடி வந்தனர்.
தேவராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த சாரதி, 24, மற்றும் பெரியவெண்மணி கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ், 23 இணைந்து ஒரு அணியாகவும், நயினார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஆதித்யா, 20, மற்றும் சித்தாமூர் கிராமத்தை சேர்ந்த அஜித், 27, ஆகியோர் ஒரு அணியாகவும் சேர்ந்து, 'பைக்' திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, தேவராஜ், ஆதித்யா மற்றும் அஜித் ஆகியோரை, செய்யூர் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து இரண்டு டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., வாகனங்கள் பறிமுதல் செய்து, மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுராந்தகம் சிறையில் அடைத்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள சாரதியை தேடி வருகின்றனர்.