மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் பல்லவர் கால பாறை சிற்பங்கள் உள்ளன. இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு என, சிலவற்றை மட்டுமே சுற்றுலாப் பயணியர் அறிந்து, கண்டு ரசிக்கின்றனர்.
இங்குள்ள முகுந்தநாயனார் கோவில், சப்த கன்னியர் வளாகம், பாறை குன்று பகுதி, கோனேரி, கொடிக்கால் குடைவரை மண்டபங்கள், பிடாரி ரதங்கள் போன்றவை குறித்து, அவர்கள் அறிந்து ெகாள்வதில்லை.
இந்நிலையில், பிரதான சிற்பங்களை தவிர்த்து, இங்குள்ள பிற சிற்பங்கள் குறித்து, நுால்கள், இணையம் வாயிலாக அறிந்து கொண்ட வரலாற்று ஆர்வலர்கள், அவற்றை அறிய ஆர்வம் காட்டுகின்றனர்.
சென்னை பகுதியில் இயங்கும் வரலாற்று சுற்றுலா நிறுவனங்கள், இத்தகைய ஆர்வலர்களை ஒருங்கிணைத்து, இங்குள்ள பிரதானமான சிற்பங்களை தவிர்த்து, மற்ற சிற்பங்களையும் காண ஏற்பாடு செய்கின்றனர்.
நேற்று சுற்றுலா வந்த வரலாற்று ஆர்வலர்கள், தரையின் கீழ் அமைந்துள்ள முகுந்தநாயனார் கோவில், பழங்காலத்தில் வழிபாட்டில் இருந்ததாக கருதப்படும் சப்த கன்னியர் சிலைகள், பாறைக்குன்று குடைவரைகள், பிடாரி ரதங்களை கண்டு ரசித்து, அவற்றை பற்றி அறிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.