மறைமலை நகர்: கூடுவாஞ்சேரி, ஓட்டேரி, மறைமலை நகர் உள்ளிட்ட காவல் நிலையங்கள், கூடுவாஞ்சேரி உதவி கமிஷனரக கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. இவற்றின் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் நடக்கும் விபத்துகள் குறித்து, கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்த காவல் நிலையம், மறைமலை நகர் அடுத்த பொத்தேரி பகுதியில் இயங்கி வருகிறது. பொது மக்கள் காவல் நிலையம் செல்லும் போது, அங்கு இருக்கைகள் இல்லாததால், வெளியே வெயிலில் பல மணி நேரம் காத்திருந்து அவதிப்பட்டனர்.
இது குறித்து, நம் நாளிதழில், கடந்த மாதம் 10ம் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, தற்போது, காவல் நிலையத்தின் முன் பகுதியில் இருந்த காலி இடத்தில், 10க்கும் மேற்பட்ட இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், மழை மற்றும் வெயில் பாதிக்காதவாறு, இரும்பு தகடுகள் கொண்டு கூரை அமைக்கப்பட்டு உள்ளது.
Advertisement