செங்கல்பட்டு: செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லுாரியில், 14ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, தலைவர் சினேகலதா சுரானா தலைமையில், கடந்த 17ம் தேதி நடந்தது. தாளாளர் விகாஸ் சுரானா வரவேற்றார். முதல்வர் அருணாதேவி ஆண்டறிக்கை வசித்தார்.
இந்த விழாவில், தமிழ்நாடு அரசு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பங்கேற்று, 2018- - 2021 கல்வியாண்டில் பயின்ற 845 மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.
இதில், பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில், 20 மாணவியர் முதல் பத்து இடங்களை பிடித்துள்ளனர். தமிழ்நாடு அரசு மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் பிரவீன் குமார் டாடியா மற்றும் பேராசிரியர்கள், மாணவியர் பங்கேற்றனர்.