நத்தம் : திண்டுக்கல் மாவட்டம் -நத்தம் சேர்வீடு கிராமத்தில் பகலில் கொத்தனார் முருகேசன் வீட்டில் 28.5 பவுன் நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நேற்று முன் தினம் முருகேசன் 54, வீட்டை பூட்டி விட்டு குட்டூருக்கு சென்றார். வீடு திரும்பிய போது முன்பக்க கதவு திறந்து கிடந்தது. பீரோவிலிருந்த 28.5 பவுன் நகை, ரூ.15,000 ஐ மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது.
நத்தம் போலீசில் முருகேசன் புகார் அளித்தார். கைரேகை நிபுணர் சுகந்தி தலைமையிலான அதிகாரிகள் தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் டிம்மி திருட்டு நடந்த வீட்டிலிருந்து சிறிது நேரம் ஓடி பிறகு நின்றது. டி.எஸ்.பி., உதயகுமார், இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, போலீசார் திருடியவர்களை தேடுகின்றனர்.