பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் ரத்ததான முகாம் நடந்தது.
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையின் ரத்த வங்கி, மேட்டுப்பாளையம் சூர்யா மருத்துவமனை மற்றும் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை, அறிவியல் கல்லூரி ஆகியன இணைந்து ரத்ததான முகாமை நடத்தியது.
இதில், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்று, 60 யூனிட்டுகள் ரத்தத்தை தானமாக அளித்தனர். நிகழ்ச்சிக்கு வித்யாலய கலை, அறிவியல் கல்லூரியின் செயலாளர் சுவாமி நிர்மலேஷாசானந்தர் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில், சுவாமி அன்னபேகஷானந்தர், கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வர் தங்கவேலு, மாணவர் நலன் முதன்மையர் கந்தப்பன், இயக்குனர் ஸ்ரீதர், சூர்யா மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் சுதாகர், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் தீபிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.