சேலம் : ஈரோடைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மின் ஊழியரிடம், ஓடும் பஸ்சில், 30 சவரன் நகைகளை மர்ம நபர்கள் 'அபேஸ்' செய்தனர்.
ஈரோடு, லட்சுமி நகரைச் சேர்ந்தவர் தாமோதரன், 80. ஓய்வு பெற்ற மின் வாரிய ஊழியரான இவர், நேற்று முன்தினம் மதியம், மனைவி சுமத்ராவுடன், பெங்களூருவில் உள்ள மகனை பார்ப்பதற்கு, ஈரோடில் இருந்து அரசு பஸ்சில் சேலம் வந்தார்.
சேலம் புது பஸ் ஸ்டாண்டில் இறங்கியபோது, அவர் வைத்திருந்த பையை காணவில்லை. அந்த பையில், 30 சவரன் தங்க நகைகள், 30 ஆயிரம் ரூபாய் இருந்ததால் அதிர்ச்சியடைந்தார். பள்ளப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.