உசிலம்பட்டி : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மாமரத்துப்பட்டி காலனி பகுதியில், மார்ச், 12ல், போலீசார் கஞ்சா தடுப்பு சோதனை நடத்தினர்.
அப்போது, தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டி சுரேஷ், 29, மதுரை சரவணன், 26, உசிலம்பட்டி அன்னம்பாரிபட்டி பிரசாத், 29, கருக்கட்டான்பட்டி நாகேந்திரன், 28, ஆகிய நால்வரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் எஸ்.பி., சிவபிரசாத் நடத்திய விசாரணையில், ஆந்திரா மாநிலம், யானமல கூதுருவைச் சேர்ந்த சுர்லா கீதா, 26, என்பவரிடம் இருந்து மொத்தமாக வாங்கி வந்ததாக தெரிவித்தனர்.
தொடர்ந்து, செக்கானுாரணி இன்ஸ்பெக்டர் சிவசக்தி தலைமையில் தனிப்படை போலீசார் ஆந்திரா சென்று, சுர்லா கீதாவை கைது செய்தனர். அவரிடமிருந்து, 69 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement