செவ்வாப்பேட்டை: செவ்வாப்பேட்டை காவல் நிலையத்திற்குட்பட்டது கந்தன்கொள்ளை கிராமம்.
இப்பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் உள்ள 'குடி'மையத்தில் இரவு நேரத்தில் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, செவ்வாப்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது அங்கு வந்த 'பஜாஜ்' ஆட்டோவை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். ஆட்டோவை நிறுத்திய ஓட்டுனர் தப்பியோடி விட்டார்.
செவ்வாப்பேட்டை போலீசார் ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் 20 அட்டைபெட்டிகளில் இருந்த 240 பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.