துப்பாக்கியால் சுட்டு பழகியவர் கைது; பயிற்சியாளருக்கு வலை

Added : மார் 19, 2023 | |
Advertisement
திருநெல்வேலி : திருநெல்வேலியில் கைத்துப்பாக்கியால் சுட்டு பயிற்சி பெற்ற சட்டக் கல்லூரி மாணவர் அஜய்கோபியை 24, போலீசார் கைது செய்தனர். பயிற்சியாளர் வெள்ளைசுந்தரை 36, தேடி வருகின்றனர்.திருநெல்வேலியில் வாலிபர் ஒருவருக்கு மற்றொருவர் கைத்துப்பாக்கியால் சுட பயிற்சியளிக்கும் வீடியோ வைரலாகியது. போலீஸ் விசாரணையில் துப்பாக்கியால் சுட பயிற்சி அளிக்கும் நபர் மகாராஜநகரை

திருநெல்வேலி : திருநெல்வேலியில் கைத்துப்பாக்கியால் சுட்டு பயிற்சி பெற்ற சட்டக் கல்லூரி மாணவர் அஜய்கோபியை 24, போலீசார் கைது செய்தனர். பயிற்சியாளர் வெள்ளைசுந்தரை 36, தேடி வருகின்றனர்.

திருநெல்வேலியில் வாலிபர் ஒருவருக்கு மற்றொருவர் கைத்துப்பாக்கியால் சுட பயிற்சியளிக்கும் வீடியோ வைரலாகியது. போலீஸ் விசாரணையில் துப்பாக்கியால் சுட பயிற்சி அளிக்கும் நபர் மகாராஜநகரை சேர்ந்த வெள்ளைசுந்தர் என்பதும், பயிற்சி பெறுபவர் அவரது உறவினர் அஜய்கோபி எனவும் தெரிந்தது.

வெள்ளை சுந்தர் மீது தேனாம்பேட்டை போலீஸ் உள்ளிட்ட பல ஸ்டேஷன்களில் வழக்குகள் இருந்தன. அஜய்கோபி சட்டக்கல்லூரி நான்காம் ஆண்டு படிக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் இப்பயிற்சி பெற்றதும், அஜய்கோபிக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் இந்த வீடியோ வெளியானதும் தெரிந்தது. அஜய்கோபியை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X