பெருமாள்பட்டு: பெருமாள்பட்டு ஊராட்சிக்குட்பட்ட இரட்டை குளம் அருகே நேற்று பெருமாள்பட்டு பசுமைக்குழ நண்பர்கள், கொரட்டூர் அன்பு கருணை இல்லம் அறக்கட்டளை மற்றும் மதுரவாயல் கிரீன் ட்ரீம்ஸ் பவுண்டேஷன் நண்பர்கள் குழு சார்பாக 250 மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு கீரீன் ட்ரீம்ஸ் பவுண்டேசன் பசுமைக் குழு ஆலோசகர் ஏ.சுந்தரம் தலைமை வகிக்க பெருமாள்பட்டு பசுமைக் குழு நண்பர்கள் குழுவைச் சேர்ந்த ஆர்.டி.பாலாஜி முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் எஸ்.முத்துவேல்பாண்டி பங்கேற்று, மரக்கன்றுகளை நட்டு விழாவை துவக்கி வைத்தார்.
விழாவில், பெருமாள்பட்டு ஊராட்சி தலைவர் பி.சீனிவாசன், ஒன்றிய கவுன்சிலர் பொற்கொடிசேகர், மதுரவாயல் டாக்டர் எம்.ஜி.ஆர்., பல்கலை கழக வணிகவியல் துறை தலைவர் சி.பி.செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், மதுரவால் டாக்டர் எம்.ஜி.ஆர்., பல்கலைக் கழக மாணவர்கள் பங்கேற்று, மரக்கன்றுகளை நடும் பணியை மேற்கொண்டனர்.