மூணாறு : மூணாறு அருகே செம்மண்ணார், கேப் ரோட்டில் பைசன்வாலி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் வீட்டின் சுற்றுச்சுவரில் மோதியதில் தேனி லட்சுமிபுரத்தைச் சேர்ந்த சசிகுமார் 22, இறந்தார்.
அவர் உள்பட நான்கு பேர் இரண்டு டூவீலர்களில் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். நேற்று மூணாறில் இருந்து கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை வழியாக கேப் ரோடு சென்று அங்கிருந்து பைசன்வாலியை நோக்கிச் சென்றனர்.
சொக்கர்முடி பகுதியில் கடும் இறக்கத்தில் மதியம் 12:00 மணிக்கு சசிகுமார் ஓட்டிய டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் சுற்றுச்சுவர் மீது மோதியது. சசிகுமார், அவருடன் பயணித்த பெரியகுளம் தினேஷ்குமார் 23, பலத்த காயமடைந்தனர். சசிகுமார் இறந்தார். தினேஷ்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் நடந்த பகுதியில் ஒன்றரை மாதத்தில் 13 விபத்துகள் நடந்துள்ளன. அதில் மூன்று பேர் இறந்த நிலையில் பலர் காயமடைந்துள்ளனர்.