தஞ்சாவூர் : தஞ்சாவூர் கால்நடை மருத்துவமனையில், பயிற்சி டாக்டர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை, மதுரவாயல், காமாட்சி நகரைச் சேர்ந்த பத்மநாதன் மகன் வசந்த் சூர்யா, 23, ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக் கல்லுாரியில் படித்து வந்தார்.
தஞ்சாவூர் அருகே, ரெட்டிபாளையத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இரவு, சக நண்பர்களான சதீஷ்குமார், சிவராஜ் ஆகிய இருவருடன் மருத்துவமனையில் தங்கி இருந்தார்.
நேற்று அதிகாலை, கால்நடை மருத்துவமனை வெளிப்புறத்தில் உள்ள 'ஷெட்'டில், வசந்த் சூர்யா, துாக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். கள்ளப்பெரம்பூர் போலீசார் விசாரித்ததில், நேற்று முன்தினம் இரவு மது அருந்திய வசந்த் சூர்யா, நண்பர்கள் இருவரும் துாங்கிய பின், தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Advertisement