உடுமலை;உடுமலை திருப்பதி கோவிலில், யுகாதி பண்டிகையையொட்டி, வரும், 22ல், ஸ்ரீ ரேணுகாதேவி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
உடுமலை பள்ளபாளையத்தில், உடுமலை திருப்பதி கோவில் வளாகத்தில், ஸ்ரீ ரேணுகாதேவி புற்றுக்கோவில் அமைந்துள்ளது. கோவிலில், யுகாதி பண்டிகை விழா, கடந்த, 8ம் தேதி துவங்கியது.
நாள்தோறும், புற்று சுத்தம் செய்து, பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. நாளை, (21ம் தேதி), மாலை, 5:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை புற்றுப்பூஜையும், இரவு, 7:00 மணி முதல், 10:00 மணி வரை, பாலாற்று பூஜையும், ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் சக்தி அழைப்பும் நடக்கிறது.
வரும், 22ம் தேதி, காலை, 10:00 மணி முதல், ஸ்ரீ ரேணுகாதேவி திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடக்கிறது. முதலில், விநாயகர் கோவிலில் இருந்து, மாப்பிள்ளை அழைப்பு, ஸ்ரீரேணுகாதேவி திருக்கல்யாண உபன்யாசம், யுகாதி பூஜை, அலங்கார பூஜை நடக்கிறது. பின்னர், ஸ்ரீ ஜமதக்னி மகரிஷி, ஸ்ரீ ரேணுகாதேவி திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து, கோ பூஜை, தரிசனம், கண்ணாடி தரிசனம், ராஜ தரிசனம், தம்பதியர் பூஜை நடக்கிறது.