உடுமலை:உடுமலை நகராட்சியில் சாக்கடை கால்வாய்களில் கொசுப்புழு உற்பத்தி அதிகரிப்பதால், பொதுமக்களுக்கு நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.
உடுமலை, நகராட்சி 33 வார்டுகளிலும் வழக்கமாக பருவநிலை மாற்றத்தின் போதும், மழைகாலத்திலும் நோய் தொற்று ஏற்படாமல் இருப்பதற்கு, கொசுப்புழு உற்பத்தியை கட்டுபடுத்துவதற்கு மருந்து தெளிக்கும் பணிகள் நடக்கிறது.
தற்போது இப்பணிகள் சுணக்கமடைந்து, சில பகுதிகளில் மட்டுமே நடக்கிறது. அதிலும் அரைகுறையாகவே நடக்கிறது.
இதனால் நகர வீதிகளில் சாக்கடை கால்வாய் முழுவதும் கழிவுநீர் தேங்குவதோடு, கொசு உற்பத்தியும் அதிகரிக்கிறது.
இதன் காரணமாக மக்கள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். பல்வேறு நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும், பொது மக்களுக்கு நோய்த்தொற்று கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுவதில்லை. நகரில் கொசுப்புழு உற்பத்தி அதிகரிப்பதால், குழந்தைகளுக்கு காய்ச்சல் தொற்றும் உயர்ந்து வருகிறது.
உடுமலை நகராட்சி நிர்வாகத்தினர், இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்டு, கொசுக்கள் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்.
Advertisement